Asianet News TamilAsianet News Tamil

நாய் வாலை.. சர்ச்சையில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. சாட்டையை சுழற்றிய குஷ்பூ, ராதிகா சரத்குமார்!

திமுக பேச்சாளாரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகைகளான ராதிகா மற்றும் குஷ்பூ குறித்து அடிக்கடி சர்ச்சையாக பேசி பல்வேறு விவகாரங்களில் மாட்டி வருகிறார்.

Actress Radhika Sarathkumar and Kushboo has filed a complaint against DMK leader Sivaji Krishnamurthy-rag
Author
First Published Jun 15, 2024, 1:01 PM IST

பாஜகவை சேர்ந்த குஷ்பூ பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரக்குறைவாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி விடுதலை செய்யப்பட்டார். திமுகவில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து மீண்டும் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டார். பின்னர், திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டங்களில் மீண்டும் பேச தொடங்கினார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

கடந்த மாதம் நடந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. சமீபத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ள வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பாஜகவை சேர்ந்தவரும், நடிகையுமான குஷ்பூ, “நாய் வாலை நிமிர்த்த முடியாத ஒரு பழமொழி உண்டு. இந்த மனிதன் அதுதான். மீண்டும் மீண்டும் பெண்களை மிகவும் புண்படுத்தும் வகையில் துஷ்பிரயோகம் செய்து வருகிறார். முதல்வர் மு.க ஸ்டாலின் அவரை சஸ்பெண்ட் மட்டுமே செய்து வருகிறார்.

Actress Radhika Sarathkumar and Kushboo has filed a complaint against DMK leader Sivaji Krishnamurthy-rag

ஏனெனில் அவர்களை மகிழ்விக்க இந்த வகையான நோயுற்ற மனம் கொண்டவர்கள் தேவை. நான் அவருக்கு எதிராக ஒரு வழக்கைத் தாக்கல் செய்கிறேன். மேலும் அவர் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கான கடுமையான பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டிய இடத்தில் அவர் இறங்குவதை உறுதி செய்வேன். மீண்டும் நான் சொல்கிறேன், அத்தகைய ஆண்கள் அவர்கள் பெற்ற வளர்ப்பை மட்டுமே காட்டுகிறார்கள். தங்கள் குடும்பத்தில் பெண்களின் அவலத்தை காட்டுகிறார்கள். அக்கா தமிழிசை அவர்கள் அனைவராலும் மிகவும் மதிக்கப்படுபவர்.

மேலும் எங்கள் பாஜக குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் அவருக்கு உரிய மரியாதையைத் தொடர்ந்து பெறுவோம். எலும்புக்கூடுகள் அலமாரியில் இருந்து விழ ஆரம்பித்தால் இந்த முட்டாள்களுக்கு தங்கள் அசிங்கமான முகங்களை எங்கு மறைப்பது என்று தெரியாது. திமுகவில் பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பகிர்ந்து பதில் அளித்த நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான நடிகை ராதிகா சரத்குமார், “இதுதொடர்பாக திமுக தலைவர்களிடம் பேசினோம். அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். திமுகவில் மலிவான பிரச்சாரத்திற்காக, இவரைப் போன்ற ஊழல்வாதிகள் தனது பொதுக் கழிப்பறை வாயை அம்பலப்படுத்த அனுமதிப்பது மிகுந்த அவமரியாதையை காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார் ராதிகா சரத்குமார். இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஐஸ்வர்யா - உமாபதி திருமண வரவேற்பில் நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios