பிக்பாஸ் ஆரவ்வின் அம்மாவாக, நடிகை ராதிகா சரத்குமார் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மார்க்கெட் ராஜா MBBS ' . ஒரு ரவுடி எப்படி டாக்டராக மாறுகிறார். என்பதை ஆக்ஷன், கமெடிய, திகில், காதல் என அனைத்தும் கலந்த என்டர்டெயன்மென்ட்  படமாக உருவாக்கி உள்ளார் இயக்குனர் சரண்.

இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகை ராதிகா, ஆரவ், நடிகை நிகிஷா படேல், காவ்யா தாப்பர் மற்றும் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவில் நடிகை ராதிகாவுக்கு, அவரின் தந்தை நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின், பட்டத்துடன் இணைத்து 'நடிகவேள் செல்வி' என பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளனர் படக்குழுவினர்.

இந்த படத்தில் இவருடைய பெயர், நடிகவேள் செல்வி ராதிகா என்றே இடம்பெறுகிறது. பட்டத்தை பெற்ற கையேடு மிகவும் உணச்சிவசத்தோடு தன் அப்பாவின் பழைய நினைவுகள் பற்றி பகிர்ந்து கொண்டு, படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறினார் ராதிகா.