இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை, பிராத்தனையின் போது 2  தேவாலயங்களிலும், ஓட்டல்களிலும் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும், இன்று ஈஸ்டர் பண்டிகை மிக பிரம்மாண்டமாக அனைத்து கிறிஸ்துவர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.  ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென கொழும்பு நகரில் உள்ள இரண்டு தேவாலயங்களிலும், ஓட்டல்களிலும் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.  இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 250திற்கும்  மேற்பட்ட, பொதுமக்கள் மக்கள் காயமடைந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்திலிருந்து உயிர் தப்பியுள்ளார் பிரபல நடிகை ராதிகா.  குண்டு வெடிப்பதற்கு முன்புதான் கொலம்பியாவில் குண்டு வெடிப்பு ஏற்பட்ட 'சின்னமோகிராண்ட்' ஓட்டலில் இருந்து புறப்பட்டுள்ளார். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் ராதிகா.