"தோனி", "ஆல் இன் ஆல் அழகு ராஜா" உள்ளிட்ட படங்களில் நடித்த  ராதிகா ஆப்தே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த "கபாலி" படம் மூலம் பிரபலமானார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, மற்ற நடிகைகள் நடிக்க தயங்கும் கவர்ச்சி வேடங்களை துணிச்சலாக ஏற்று நடித்து வருகிறார். நிர்வாண புகைப்படம், படுக்கையறை காட்சிகள் என்று ராதிகா ஆப்தே குறித்து வெளியாகி, சர்ச்சையை கிளப்பாத விஷயங்களே கிடையாது. இதுபோதாது என்று அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ராதிகா ஆப்தே. உடல் மொத்தமும் அப்பட்டமாக தெரியும் படியான கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

தமிழில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, இந்தியில் படுகவர்ச்சியாக நடித்து பகீர் கிளப்புகிறார். இந்தியில் "லஸ்ட் ஸ்டோரிஸ்", "பர்ஷாத்" ஆகிய படங்களில் படுகவர்ச்சியாக நடித்தார் ராதிகா ஆப்தே. அப்படங்கள் பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்தியிலேயே இப்படி என்றால் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் போது சொல்லவா வேண்டும், "தி வெட்டிங் கெஸ்ட்" என்ற ஆங்கில படத்தில் ராதிகா ஆப்தே படு ஆபாசமாக நடித்த படுக்கை அறை காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. இதுபோன்று அடுத்தடுத்து சர்ச்சைகளை கிளப்பி வரும் ராதிகா ஆப்தே, தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது செயலுக்காக வருந்துவது போல் பேசியுள்ளார். 

"கதைக்கு தேவை என்பதால் தான் பட்லாபூர் என்ற படத்தில் அரைகுறை ஆடையில் நடித்தேன். ஆனால் இப்போது என்னிடம் சொல்லும் கதைகளுக்கு துளிகூட கவர்ச்சி தேவையில்லை என்றாலும், கவர்ச்சி காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடனே கதை கூறுகின்றனர்" என வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் தனக்கு தொடர்ந்து ஆபாச கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைப்பதாகவும், அதுபோன்ற கதைகளில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.