பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர். தமிழில் வெற்றிச்செல்வன் படம் மூலம் அறிமுகமான இவர், தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார்.

இவர் சமீபத்தில் பாலிவுட் நடிகை நேகா துபியா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது, அவர் தமிழ் படம் நடித்த போது ஒரு ஹீரோவுக்கு பளார் விட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார். சில தமிழ் படத்தில் நடித்தபோது, நான் நடித்த அந்த ஒரு பட ஹீரோ என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என்றும் என்னை தொட்டுப்பேசி தவறாக நடந்துக்கொள்ள முயன்றார் என்றும் அதனால் அவரை நான் ஓங்கி கன்னத்தில் அறைந்ததாக கூறியிருந்தார்.

இந்தி படங்களில், ஆடையை குறைத்து துணிச்சலாகவும், ஆபாசமாகவும் நடித்து வருகிறார். மேட்லி குறும்படத்தில், ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்த புகைப்படமும், பார்ச்ட் என்ற படத்தில் அவர் நடித்த படுட்ககையறை காட்சிகளும் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்த புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள், இப்படி நிர்வாணமாக நடிக்கலாமா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இது போன்று நடிக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் கண்டித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், தனது ஆபாச படங்கள் வெளியானது குறித்து ராதிகா ஆப்தே கருத்து கூறுகையில், எனது நிர்வாண படங்கள்இணையதளத்தில் கசிந்து விட்டது என்று எனது அம்மா முதலில் கூறினார். அந்த புகைப்படங்களை அவருக்கு யாரோ வாட்ஸ்அப் மூலம் அனுப்பி உள்ளனர். அதன் பிறகு, எனது கார் டிரைவரும் அந்த படங்கள் வெளியானது குறித்து கூறினார்.

எனது நிர்வாணப் படங்கள் ஏற்கனவே வெளியாகி விட்டதால், இனிமேல் என்னிடம் மறைப்பதற்கு எதுவு இல்லை என்ற ராதிகா ஆப்தே இனி நான் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும் அந்த படங்களை வைத்து இனி எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.