திருமணம் ஆகி 20 வருடம் ஆகிடுச்சு..! சரத்குமார் மீது காதல் பொங்க பொங்க பதிவிட்ட ராதிகா..!
இன்றுடன் இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி காதல் பொங்க பொங்க இன்ஸ்டாராம் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தில் பாஞ்சாலியாக நடித்தவரா இது? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் மிளிர்ந்தார்.
80 களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த ராதிகா, தற்போது வரை வெள்ளித்திரையில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். லாக்டவுனுக்கு முன்னதாக சரத்குமாருடன் ராதிகா நடித்த “வானம் கொட்டட்டும்” படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ராடன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ராதிகா, சித்தி, அண்ணாமலை, அரசி, அண்ணாமலை, வாணி ராணி, செல்லமே, தாமரை, செல்வி, சித்தி 2 என வரிசையாக சூப்பர் ஹிட் சீரியல்களை தயாரித்து வருகிறார்.
வழக்கமான சீரியல்களைப் போல் இல்லாமல் தைரியமான பெண்ணாக ராதிகா நடிக்கும் கதாபாத்திரத்தை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள் என்ற கதையையே சித்தி தொடர் மாற்றியது. பிரைம் டைமில் சன் தொலைக்காட்சியில் வெளியான சித்தி சீரியலுக்கு ஆண்கள் பட்டாளமும் அடிமையாக இருந்ததை மறந்துவிட முடியாது.
இந்நிலையில் இவர் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரை, கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் தான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் சரத்குமார் என்கிற மகனும் உள்ளார். இன்றுடன் இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி காதல் பொங்க பொங்க இன்ஸ்டாராம் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்தது விதியின் வினோதம் என்றும் இந்த அற்புதமான ஒற்றுமையான பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள்தான் எனக்கு வலிமையை தருபவர் என்றும் உங்களை நான் நேசிக்கின்றேன் என்றும் ராதிகா பதிவு செய்துள்ளார். இவரின் இந்த பதிவிற்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் மாநில மகளிர் அணி செயலாளராக பதவி வகிக்கும் ராதிகா, மெல்ல சின்னத்திரையில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.