Actress Raai Laxmi reveals Trishas wedding secrets
எப்ப கல்யாணம்? என்ற கேள்வியைக் கேட்டால் எல்லா நடிகைகளுக்குமே கோபம் வரும். பட வாய்ப்பு குறைந்து போனவரிடம் கேட்டால் அந்த கோபம் அதிகமாகிவிடும்.
நம்பர் ஒன் ஆக இல்லாவிட்டாலும் கூட சில படங்களில் நடித்து நல்ல இடத்தில் இருந்தவர் லட்சுமி ராய். பின்னர் படங்கள் குறைந்ததால் தன் பெயரை ராய் லட்சுமி என்று மாற்றிக்கொண்டார். இப்போது ராய் லட்சுமி கையில் ஒரே ஒரு படம் தான் இருக்கிறது. அதில் நடித்து விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று உச்சகட்ட கவர்ச்சியில் நடிப்பதாக சொல்கிறார்கள். அவரிடம் யாராவது திருமணம் குறித்து கேட்டால் ‘எனக்கு இப்ப 28 வயசு தான் ஆகுது. 30 வயது தாண்டியும் கூட ஹீரோயினா நடிச்சுட்டு இருக்காங்க... அவங்ககிட்ட போய் இதைக் கேளுங்க...’ என்று சீறுகிறாராம்.
ரய லட்சுமி சொல்வது போல நயன் தாரா, அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் தான் 30 ஐத் தாண்டியும் கூட திருமணம் செய்துகொள்ளாமல் நடித்து வருகிறார்கள். அவர்களை குறி வைத்து தான் இந்த வார்த்தைகளை விட்டிருக்கிறார் லட்சுமி.
அண்ணன் எப்ப கிளம்புவான்... திண்ணை எப்ப காலியாகும்னு எதிர்பார்க்கிறீங்களோ...?
