பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி ஷங்கர்.

இவர் நடிப்பில் ஏற்கனவே வெளியான 'மேயாத மான்' , மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 'குறத்தி ஆட்டம்' மற்றும் 'மான்ஸ்டர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கோலிவுட் திரையுலகத்தில் அறிமுகம் ஆகும் பல நடிகைகள் இருந்த இடம் தெரியாமல் சென்றுக்கொண்டிரும் நிலையில், தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதால் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஏற்கனவே பிரியா பவானி, ஒருவரை காதலித்து வருவதாக தகவல் உலா வைத்துக்கொண்டிருந்த நிலையில், சூசகமாக தற்போது காதலர் பற்றி சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா, சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில், பிரியாபவானி அவருடைய பாய் ஃபிரண்ட் உடன் தான் அதிகம் பேசுவார் என கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து, தற்போது பிரியா பவானி, அவருடைய பாய் ஃபிரண்ட் ராஜ் என்பவரின்  பிறந்தநாளை சமீபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடி உள்ளார்.  அதன் போட்டோக்களை வெளியிட்டு "என் வாழ்க்கையில் எப்போதும், எல்லாமும் நீயாக இருக்கிறாய்.  உன்னை பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வேன் நீ ஒரு சிறந்த மனிதன் என்று என்னுடைய வளர்ச்சிக்கு நீ தான் காரணம் என பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

 

 

மேலும் பாய் ஃபிரண்டுக்கு பிடித்த பிங்க் கலரில் ஜெர்சி வடிவத்தில் கேக் ஆர்டர் செய்து, அதில் அவருக்கு பிடித்த சில கம்பெனி அடையாளத்தை கேக்கில் வரைந்து ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதன் மூலம் இவர் தான் பிரியா பவானியின் காதலர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.