தமிழ் சினிமாவில் உள்ள, 30 வயதை தாண்டிய கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி திரைப்படம் காமெடியில் பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமான, ஆர்.ஜே.பாலாஜிக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஓவர் கவர்ச்சி காட்டுவதில், அம்மணி தாராளம் காட்டினாலும் ஏனோ ஒரு சில காரணங்களால் இன்னும், முன்னணி நடிகையாகும் வாய்ப்பு மட்டும் இவருடைய கதவை தட்டாமலே உள்ளது.

மேலும் தற்போது இவருடைய கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. 'ஆதித்திய வர்மா' மற்றும், 'சுமோ' படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு, மிர்ச்சி சிவாவிற்கு ஜோடியாக 'வணக்கம் சென்னை' படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இவர் கொசுவலை போன்ற உடை அணிந்து, ஓவர் கவர்ச்சி காட்டி எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீப காலமாக படவாய்ப்பை பெற, நடிகைகள் கவர்ச்சி என்கிற ஆயுதத்தை கையில் எடுப்பது போல் இவரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.