‘சைக்கோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. தயாரிப்பாளர் T.முருகானந்தம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் மிக பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார். 'அவள்' , 'அரண்மனை' ஆகிய இரண்டு திகில் படங்களை தொடர்ந்த ‘பிசாசு 2’  படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 

 இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் திண்டுகல்லில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். 

மேலும் சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணா இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இரண்டாம் பாகத்தில் எக்கச்சக்க திகில் கதைகள் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் படத்தில் புதிதாக இணைந்துள்ள பூர்ணா தான் பேயாக மிரட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.