தனது அடுத்த படத்துக்கு 15 நாள் கால்ஷீட்டுக்கு ரூ 2 கோடி சம்பளம் கேட்டதாக வந்த செய்தியை மறுக்கும் நடிகை பூஜா ஹெக்டே இயக்குநர் மேல் ஏற்பட்ட கோபத்தால் படத்தை விட்டும் வெளியேறினார்.

தமிழில் மிஷ்கினின் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முதல் இடத்தை எட்டிவிட்டார். கடந்த வாரம் மகேஷ் பாபுவுடன் இவர் ஜோடி போட்ட ‘மகரிஷி’படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இப்பட ரிலீஸ் சமயத்தில் பூஜா ஹெக்டே குடிபோதையில் தனது டிரைவருடன் காரில் பயணித்தபோது போலீஸில் பிடிபட்டதாகவும் அப்போது அவரது காரை போலீஸார் பறிமுதல் செய்ததாகவும் பரபரப்பான செய்திகள் நடமாடின.

அச்செய்திகளைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே தான் அடுத்து நடிக்கவிருக்கும் ‘வால்மீகி’படத்துக்கு வெறும் 15 நாட்களுக்கு இரண்டு கோடி சம்பளம் பேசி முடித்திருப்பதாக செய்திகள் பரவின. தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தின் ரீமேக்தான் இந்த ‘வால்மீகி. அப்படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார்.

இந்நிலையில் தனது வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் தான் மேற்படி இரு செய்திகளையும் பரப்பிவருகிறார்கள். இரண்டுமே தவறான செய்திகள் என்று மறுத்திருக்கும் பூஜா ஹெக்டே படத்தின் இயக்குநர்தான் ‘இரண்டு கோடி சம்பள’ ரகசியத்தை வெளியிட்டிருக்கவேண்டும் என்று கருதி தற்போது படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.