படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்ட ரெடி... ஓவர் நெருக்கம் காட்ட ரூ.3 கோடி கேட்கும் பிரபல நடிகை...!
தெலுங்கில் தொட்டது எல்லாம் ஹிட்டு என்பதால், தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார்.
தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழ் பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இந்தியில் கூட சல்மான் கானுடன் ‘கபி ஈத் கபி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது ஹரி-சூர்யா 6வது முறையாக இணையும் அருவா படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படத்தில் ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ''ஹவுஸ்ஃபுல்'' படம் கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் தெலுங்கில் அவர் நடித்த "ஆல வைகுந்தபுரமுலு" படம் நல்ல வரவேற்பை பெற்றது.தெலுங்கிலும், இந்தியிலும் படு பிசியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, மேலும் பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்து அசத்தி வருகிறார்.
தெலுங்கில் தொட்டது எல்லாம் ஹிட்டு என்பதால், தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார். இந்தியில் சல்மான்கான் ஜோடியாக என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்தி படமொன்றில் நடிக்க பூஜா ஹெக்டேவை படக்குழுவினர் அணுகி உள்ளனர். படத்தில் கவர்ச்சி காட்சிகளும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளும் உள்ளன என்று அவரிடம் தெரிவித்து கதை சொல்லி உள்ளனர். நெருக்கமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டுமானால் ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று பூஜா ஹெக்டே கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேர்வு செய்வதா, வேண்டாமா? என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர்.