நடிகைகள் தங்களுடைய உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள நினைப்பது சகஜம் தான். ஆனால் சமீப காலமாக ஆண்களுக்கு நிகராக சிக்ஸ் பேக் வைத்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர், சில நடிகைகள். அந்த வகையில் கோ,நெருங்கிவா முத்தமிடாதே போன்ற படங்களில் நடித்த நடிகை பியா சிக்ஸ் பேக் வைத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடித்த 'கோவா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். இந்த படத்தை தொடந்து, '  கோ', 'சட்டம் ஒரு இருட்டறை', 'நெருங்கிவா முத்தமிடாதே' போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

மேலும், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் இவர் சமந்தா, ஷ்ரத்தா கபூர், வரிசையில் சிக்ஸ் பேக் முயற்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளார். இந்த புகைப்படத்தை நடிகை பியா அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இதை பார்த்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ: