5 வருடம் மன அழுத்தம்... இறந்து விடுவேன் என பயந்தேன் பிரபல தமிழ் நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்!

நடிகர் சுஷாந்த் சிங், மரணத்தை தொடர்ந்து பிரபல நடிகை ஒருவரும் சுமார் ஐந்து வருடங்கள் மன அழுத்தம் காரணமாக அவதி பட்டு வந்ததாக கூறியுள்ளார். இது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிற்று கிழமை மதியம் 2 மணி போல் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய, பிரேத பரிசோதனையில் கூட தூக்கு போட்டு கொண்டதால் மூச்சு முட்டி உயிர் விட்டதாக கூறப்பட்டாலும், இவருடைய குடுபத்தினர் தொடர்ந்து சுஷாந்த் மரணத்தில் உள்ள உண்மையை கொண்டு வரவேண்டும் என கூறி வருகிறார்கள்.

பாலிவுட் திரையுலகையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ், கிட்ட தட்ட ஐந்து ஆண்டுகளாக தனக்கும் மன அழுத்தம் இருந்தது என்றும்,  இறந்துவிடுவேனோ என்று பயந்ததாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். இவர் ‘தேரோடும் வீதியிலே’என்ற தமிழ்ப்படம் உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, நான் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். ஷூட்டிங் இருந்தாலும் இல்லை என்றாலும் அதற்கான மருந்துகளை உற்கொண்டேன். நான் இறந்து விடுவேன் என்கிற பய உணர்வு எனக்குள் எப்போதுமே இருந்து கொண்டே தான் இருக்கும். சில சமயம் இறந்துவிட்டதாக கூட உணர்வேன். அந்த சமயங்களில் உடனே நான் கோகிலாபென் மருத்துவமனைக்கு விரைந்து செல்வேன். ஆனால் இதுபோன்ற தருணங்களில் அதிர்ஷ்டவசமாக எனக்கு எனது குடும்பம், நண்பர்கள் அருகில் இருந்து என்னை காப்பாற்றினார்கள்’ என்று கூறி தன்னை யாராலும் பிரிந்து கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இவரின் பதிவு இதோ: