தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர்.

இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும்  கவனம் செலுத்தி வருகிறார். அதே போல்... பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார்.

நடிகை நயன்தாராவை தவிர, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சிலர் பெப்சி தொழிலார்களுக்கும், கொரோனா தடுப்பு பணிக்கான நிதி கொடுப்பது பற்றி வாய் திறக்காமல் இருந்து வரும் நிலையில், நடிகை பார்வதி நாயர், முன்னாள் வந்து தன்னால் முடிந்த  உதவிகளை செய்துள்ளார்.

அந்த வகையில், பிரதமரின் நிதிக்கு 1 லட்சம், தமிழக முதலமைச்சரின் நிதிக்கு 1 லட்சம், 1500 கிலோ அரிசி பெப்சி ஊழியர்களுக்கும், பத்திரிகையாளர் சங்கத்திற்கு 1000 கிலோ அரிசியையும் வழங்கியுள்ளார். இவரின் இந்த உதவிக்கு இவரை பலரும் மனதார பாராட்டி வருகிறார்கள்.