actress parvathi against super star mamooty
நடிகை பார்வதி மேனன் தன் மனத்தில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் குணம் உடையவர். அதற்குப் பிறகு என்னதான் பிரச்னை வந்தாலும், அதனை தைரியமாக எதிர்கொள்ளும் துணிச்சலும் நேர்மையும் மன தைரியமும் கொண்டவர்.
மலையாள நடிகையான இவர், தமிழில் பூ படத்தின் மூலம் பிரபலமாகி தனுஷுடன் 'மரியான்' , 'உத்தமவில்லன்', 'பெங்களூரு நாட்கள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த 'கசபா' படத்தில் அவர் பெண்களை இழிவு படுத்தும் விதமாக சில வார்த்தைகளைக் குறிப்பிட்டுப் பேசியது வருத்தமளித்ததாகக் கூறியிருந்தார்.
ஆனால் மம்மூட்டியின் தீவிர ரசிகர்கள், பார்வதிக்கு அறிவுரை கூறும் விதத்தில், சினிமாவிற்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசவேண்டாம் எனக் கூறி கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து சற்றும் கவலைப்படாத பார்வதி, இப்படிக் கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வழக்கம் போல் நான் சொன்ன விஷயத்தை விட்டு விட்டு தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்கிறீர்கள். என்னை கேவலம் ஒரு சாதாரண நடிகை என சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.

இதேபோல் நடிகை கடத்தல் விவகாரத்திற்குப் பின் மலையாள திரையுலகைச் சேர்த்த நடிகைகள் பாதுகாப்பிற்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு, மம்மூட்டி நடித்துள்ள 'கசபா' படத்தைத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்களாம்.
