நடிகை நிவேதா தாமஸுக்கு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நிலையான இடம் கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து குணச்சித்திர வேடத்தில் நடித்து கலக்கி வருகிறார். 

அந்த வகையில், இவர் விஜய்யின் தங்கையாக நடித்த ஜில்லா, கமலஹாசனின் மகளாக நடித்த 'பாபநாசம்' மற்றும் ரஜினியின் மகளாக நடித்த 'தர்பார்' ஆகிய படங்களில் இவருடைய கதாப்பாத்திரம் பெரிதாக பேசப்பட்டதுடன், படமும் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து, அடுத்ததாக தல அஜித் நடிப்பில் 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டு, மிக பெரிய வெற்றி பெற்ற 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இந்த படத்தில், அஜித் நடித்த வேடத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அஞ்சலி மற்றும் அனன்யா நாகல்யா ஆகியோர் மற்ற இரண்டு நாயகிகளாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.