தீபாவளி ரேஸில் ’சர்கார்’விஜயுடன் மோதும் விஜய் ஆண்டனியின் ‘திமிறு புடிச்சவன்’ படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜ் இந்தப்படம் தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் என்று ஆணித்தரமாக நம்புகிறார். புல்லட் ஓட்டும் திமிர் பிடித்த போலீஸ் கேரக்டராம் இதில் அவருக்கு.

 “ திமிறு புடிச்சவன்’ கதையைச் சொல்லும்போதே இயக்குநர் கணேஷா என்னை பயமுறுத்தி விட்டார். புல்லட் ஓட்ட வேண்டும் என்று சொன்னார். அதை கற்றுக்கொண்டு ஓட்டினேன். படப்பிடிப்பில் இயக்குநரை உட்காரவைத்து ஓட்டிக் காட்டினேன். பின்னர் விஜய் ஆண்டனியை வைத்து ஓட்டினேன். திடீரென ஒருநாள் மீன் பாடி வண்டி ஓட்ட சொன்னார். டப்பிங்கில் படத்தைப் பார்த்தபோது எனக்கே வித்தியாசமாக இருந்தது. படம் முழுக்க புதுசு புதுசாக நிறைய செய்ய சொல்லிக்கொண்டே இருந்தார்கள். நான் நடித்ததிலேயே என்னுடைய முக்கியமான படமாக இது இருக்கும்” என்றார்.

‘’ எனக்கும் சினிமாவில், மாடலிங் செய்தபோது, பாலியல் தொந்தரவுகள் நடந்திருக்கின்றன. அதை இப்போது வெளியே சொல்ல விரும்பவில்லை. சமீபத்தில் இணையங்களில் வெலியான எனது ஆபாசப்படங்களைப் பற்றி தொடர்ச்சியாக விசாரிக்கிறார்கள். அது ஃபோட்டோஷாப்பில் பண்ணப்பட்ட சித்துவேலை என்று சொல்லித் தப்பிக்கவிரும்பவில்லை. நான் மாடலிங்கில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்டில்கள் அவை. அவற்றை நான் பிரபலமாகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வெளியிட்டு என்னை தர்மசங்கடப்படுத்துகிறார்கள்’’ என்று உண்மையையும் மறைக்காமல் ஒப்புக்கொள்கிறார் இந்த மதுரைக்காரப்பொண்ணு.