சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழகத்தின் கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்ட இவர், ஒரு நாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெய ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத் தமிழன் படத்தில் பாவாடை, தாவணியில் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த நிவேதா பெத்துராஜ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். 

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பார்ட்டி, ஜகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சினிமாவில் கவர்ச்சி இன்றி நடிக்கும் நிவேதா பெத்துராஜ், சோசியல் மீடியாவில் தனது படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். 

அந்த வகையில் சமீபத்தில் அவரது ரசிகர் ஒருவர், காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல் என்று நச்சென பதிலளித்துள்ளார்.