நடிகை நிக்கி கல்ராணி, முதல்முறையாக தான் காதலித்து வருபவர் பற்றியும், தன்னுடைய திருமணம் குறித்தும் கூறியுள்ளார்.

மலையாள திரையுலகில் கடந்த 2014ஆம் ஆண்டு நடிகையாக தன்னுடைய பயணத்தை துவங்கிய நடிகை நிக்கி கல்ராணி, இதைத்தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார்.  இவர் நடித்த சில தெலுங்கு படங்கள் வெற்றிப் படங்களாக அமையவே,  தமிழ் மற்றும் கன்னட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பார்வை இவர் மேல் பட்டது.

தமிழில் நிலையான இடத்தை பிடித்து விட்ட நிக்கி, தற்போது முன்னணி ஹீரோயின் இடத்தை பிடிக்க நோக்கி செல்ல, போட்டுக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.  

அந்த வகையில், தற்போது இவர் இயக்குனர் ஓமர் லுலு இயக்கிவரும் 'தமாகா' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், 'தமாகா' படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் மீடியாக்கள் கேட்ட கேள்விக்கு நிக்கிகல்ராணி பதிலளித்தார். அப்போது அவருடைய காதல் வாழ்க்கை பற்றியும், திருமணம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நிக்கிகல்ராணி,  தான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாகவும், மூன்று வருடத்திற்குப் பின் திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த தகவலை, நிக்கிகல்ராணி கூறிய பின்,  அந்த நபர் யாராக இருப்பர் என தெரிந்து கொள்ளும் ஆர்வம், அனைவர் மத்தியிலும்  அதிகரித்துள்ளது. மேலும் நிக்கி கல்ராணி 'ராஜவம்சம்' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சசிகுமார் நிக்கி கல்ராணிக்கு ஜோடியாக நடிக்கிறார்.  யோகி பாபு, ராதாரவி, விஜயகுமார், ராஜ்கிரண், உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.