பிரபல நடிகை நிகிதா கடந்த 5 ஆம் தேதி கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது அது கணவரின் திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒடியா மொழியில் "சோரி சோரி மனா சோரி", மா ரா பனடாகனி',  உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர், 32 வயது நடிகை நிகிதா என்கிற லட்சுமி ப்ரியா. மேலும் பலர் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் லிபன் சாகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் தன்னுடைய ஆறு மாத குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். இவர் மாடியில் நின்று கணவருடன் பேசிக்கொண்டிருந்தார் அப்போது திடீரென்று அவர் அலறும் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.  நிகிதா மாடியிலிருந்து கீழே விழுந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

நிகிதாவின் கணவர் மாடியில் நின்று கொண்டிருந்தார்.  குடும்பத்தினர் நிகிதாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் மும்முரமாக இருந்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நிகிதா மரணமடைந்தார்.

இந்நிலையில் நிகிதாவின் தந்தை, தன்னுடைய மகளை அவரது கணவர் லிபன் தான், மாடியில் இருந்து தள்ளிக் கொலை செய்துவிட்டார் என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கொடுத்துள்ள புகாரில், நிகிதாவை அவரது கணவரும் அவரது குடும்பத்தினரும் மனதளவில் கொடுமைப்படுத்தினர். சம்பவத்தன்று நிகிதாவுக்கு அவருடைய கணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது பிரச்சினையை பேசி தீர்க்க இருவரும் மாடிக்கு சென்ற சிறிது நேரத்தில் என் மகள் மாடியில் இருந்து விழுந்து சுயநினைவு இல்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். 

தன்னுடைய மகள் மீது உள்ள கோபத்தில், தனியாக பேச வேண்டும் என்று அழைத்து செய்து அவருடைய கணவர் லிபன் தான், திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என்று மனுவில் கூறியுள்ளார்.  இந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.