வெற்றிவேல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளாவைச் சேர்ந்த நிகிலா விமல். கடைசியாக கார்த்திக்கு ஜோடியாக நடித்த தம்பி படத்தில் நிகிலா விமலின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிகிலா விமலின் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

நிகிலா விமலின் தந்தை பவித்ரனுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து கண்ணூரில் உள்ள பரியரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மருத்துவமனையிலேயே மரணம் அடைந்தார். 

சிபிஐ கட்சியின் தேசிய துணை செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் இருந்தவர் பவித்ரன். அவர் இறந்த செய்தி அறிந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பவித்ரனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.