கொரோனா ஊரடங்கு பிஸியாக சுற்றி கொண்டிருந்த பல நடிகைகளை வீட்டிலேயே அமர வைத்து விட்டது. அவர்களும் சும்மா இருக்க முடியாமல், ஒரு முறை கூட எட்டிப்பார்க்காத கிச்சனுக்கு சென்று, தன்னுடைய அம்மாவுக்கு உதவி செய்தது மட்டும் இன்று, வீடியோக்களை பார்த்து, விதவிதமான சமையல் செய்து அசத்தினர்.

மேலும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகும் ஒவ்வொரு சவாலையும் செய்து காட்டுவதற்காக, வீட்டு வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்தனர். இதுகுறித்த விடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.

சிலர், இந்த ஊரடங்கில் தங்களுக்கு தெரியாத சில விஷயங்களை கற்று கொள்வதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, பூமி படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நிதி அகர்வால், இந்த படத்தை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதால், தமிழ் படங்களில் நடிக்கும் போது  உச்சரிப்பு சரியாக வரவேண்டும் என்பதற்காக, தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு தமிழ் கற்றுக் கொண்டு வருகிறாராம்.