ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை நிதி அகர்வால், தற்போது நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் இவரை பற்றிய ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவ அதற்கு முற்று புள்ளி வைத்துள்ளார் நிதி அகர்வால்.

அதாவது, இவருக்கும் இவருடைய குடும்ப நண்பர் ஒருவருக்கும், யாருக்கும் தெரியாமல் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தகவல் பரவியது. இந்த விஷயம் உண்மையா என்கிற கோணத்தில் பல்வேறு செய்திகளும் உலா வந்தது.

இந்நிலையில், நிதி அகர்வால்... தனக்கு நிச்சயதார்த்தம் உண்மையில் நடந்து விட்டதா, இல்லையா என்கிற தகவலை ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர் "இது யாரோ கிளப்பி விட்ட வதந்தி என்றும், தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற வில்லை என கூறியுள்ளார்.

நிதி அகர்வால் நடிப்பில் இதுவரை தமிழில் ஒரு படங்கள் கூட வெளியாகாத நிலையில், தற்போது இந்த வதந்தி, வந்து ஓய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.