"இனிது, இனிது காதல் இனிது", "மெளனம் பேசியதே" போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நேஹா பெண்ட்ஸே. மராத்தி மற்றும் இந்தியில் பல டி.வி. சீரியல்களில் நடித்துள்ளார்.மேலும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டவர். 

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற தொழிலதிபரான ஷ்ர்துல் பயஸ் என்பவரை நேஹா பெண்ட்ஸே திருமணம் செய்து கொண்டார். ஷ்ர்துலுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களது பிரம்மாண்ட திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், 3ம் தாரமாக திருமணம் செய்து கொண்ட தொழிலதிபர் குறித்தும், நடிகை நேஹா குறித்தும் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் காமெடியாக கலாய்த்து வருகின்றனர். 

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு ஹாட் பிகினி தரிசனம்... கிளு, கிளு போட்டோ போட்டு... இளசுகளை கிறங்கடித்த பிரபல நடிகை...!

இதனால் கடுப்பான நேஹா, நக்கலாக கமெண்ட் அடிப்பவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேட்டி ஒன்றில்  தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது என்ன பெரிய விஷயம்?. பலரும் சில காரணங்களால் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர். பலர் திருமணத்திற்கு முன்பே தவறான ரிலேஷன் ஷிப்பில் இருக்கின்றனர். அதில் காதல், அர்பணிப்பு என அனைத்து சமாச்சாரங்களும் திருமணத்தை போலவே இருந்தாலும், அது சட்டப்படியான திருமணம் அல்ல. 

இதையும் படிங்க: "அழகிய அசுரா" பாடலுக்கு டிக்-டாக்... ஷெரினின் பின்னழகை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ...!

அதனால் தான் ஷர்துல் இருமுறை விவாகரத்தானவர் என்பது விவாத பொருளாகியுள்ளது. அவர் பாசிட்டீவ் எண்ணங்கள் கொண்டவர். அவரது கடந்த கால வாழ்க்கை குறித்து எதையும் என்னிடம் மறைக்கவில்லை. ஏன் நானும் கல்யாணத்திற்கு முன்பு உறவில் இருந்தவள் தான் என சீறியுள்ளார். நெட்டிசன்களுக்கு நேஹா அளித்த இந்த பளீச் பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.