நடிகை நஸ்ரியா ரயில் படிக்கட்டில் நின்று கொண்டு குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. 

தமிழில் ‘நேரம்’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் எனும் நிக்கா’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. மலையாளத்தில் இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கிய ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.

தற்போது ஃபகத் ஃபாசில் நடித்த ‘கூடே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியுள்ள நஸ்ரியா, தமிழிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Scroll to load tweet…

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடிக்கவுள்ளார். இதில் அஜித்துடன் நஸ்ரியா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் படு சுறுசுறுப்பாக இருக்கும் நஸ்ரியா சமீபத்தில் ரயிலின் படிகட்டில் நின்று கொண்டு “டப்பாங்குத்து” என்று சொல்லி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பல வருடங்களாக நஸ்ரியா படங்களில் செய்யும் குறும்புத்தனத்தை பார்க்காத அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.