இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நஸ்ரியா, நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நஸ்ரியா, நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது

மேலும் செய்திகள்: கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட ஹீரோயின்...! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்..!

'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகும் முன்பே, இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம்ம ரீச் ஆனது. குறிப்பாக குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கம்மிங் பாடலுக்கு, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நடனமாடி தங்களுடைய சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வந்தது.

இதை அடுத்து தற்போது 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'மாஸ்டர்' படத்தின் பாடலுக்கு, நடிகை நஸ்ரியா பிரபல இயக்குனரின் மனைவியோடு சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். 

மேலும் செய்திகள்: ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்குன்னு இருக்கும் கீர்த்தி சுரேஷ்... பார்த்தாலே கிக்கேற வைக்கும் ‘பளீச்’ கிளிக்ஸ்...!

நேரம், ராஜா ராணி, நையாண்டி, போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நஸ்ரியா நடித்திருந்தாலும் இவரது அழகும், கியூட் ரியாக்ஷனும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முன்னணி நடிகையாக திரையுலகில் நிலைப்பார் என எதிர்பார்த்த நிலையில், பிரபல நடிகர் பகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின், மலையாளத்தில் சில படங்கள் நடித்தாலும், தமிழில் இவர் நடிப்பில் ஒரு படங்கள் கூட வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்: 'சாரங்க டரியா' பாடலில் சாய் பல்லவி ஆட்டத்தை... புகழ்ந்து தள்ளிய சமந்தா!

இந்நிலையில் இவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் மனைவி அலீனாவுடன், 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு 7 லட்சங்களுக்கு மேல் லைக்குகளை குவித்துள்ளது.

View post on Instagram