Asianet News TamilAsianet News Tamil

இந்த நாள்... இந்த தேதியை... பெண்கள் குறிச்சி வச்சிக்கோங்க..! பெண் மருத்துவருக்கு கிடைத்த நீதிக்கு அதிரடி அறிக்கை வெளியிட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா..!

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர், நான்கு காம கொடூரர்களால், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கழுத்து இருக்கு கொள்ளப்பட்டு, பின் அவருடைய உடலுக்கு தீ வைத்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

actress nayanthara statement for priyanka reddy issue justice
Author
Chennai, First Published Dec 7, 2019, 4:57 PM IST

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர், நான்கு காம கொடூரர்களால், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கழுத்து இருக்கு கொள்ளப்பட்டு, பின் அவருடைய உடலுக்கு தீ வைத்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

இந்நிலையில், இந்த குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளை, நேற்று அதிகாலை என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அதிகாரிகளின் இந்த தண்டனைக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா, அறிக்கை வெளியிட்டு... தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். 

actress nayanthara statement for priyanka reddy issue justice

இந்த அறிக்கையில், "சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணை இல்லை" என்கிற இன்று உண்மையாகி இருக்கிறது. உண்மையான நாயகர்களால், தெலுங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்கு புறம்பாக என்மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக, தீர்க்கமான பதில் அளித்துள்ளார்கள்.

பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும், உறுதி செய்வது நமது கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே, நியாயமான மனிதாபிமானம் மிக்க நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன். நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை, பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்று ஆறுதல். 

actress nayanthara statement for priyanka reddy issue justice

தவறு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு, இந்த நடவடிக்கை சற்றே பயன்தரும். மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதும், ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்பதை கற்றுத்தர வேண்டும்.

பெண்களை மதிப்பவன் பாதுகாப்பான நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிராக அன்பான உலக மாற்ற வேண்டியது நம் கடமை, அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியும் என நயன்தாரா தன்னுடைய அறிக்கையில் கூறி, பெண் மருத்துவருக்கு தன்னுடைய இரங்கலையும் தெரிவித்துள்ளார். 

actress nayanthara statement for priyanka reddy issue justice

Follow Us:
Download App:
  • android
  • ios