நடிகை நயன்தாரா நெற்றி கண் படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

நடிகை நயன்தாரா நெற்றி கண் படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமிழில் தொடர்ந்து மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களையும், கதையின் நாயகியாகவும் நடிப்பதில் ஆர்வம் கட்டி வருகிறார். அந்த வகையில் 'நெற்றிக்கண்' திரைப்படத்தை... அவரது காதலர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி, நயன்தாராவின் நடிப்பு பார்பவர்களையே மிரள வைத்தது.

இந்த படத்தின் நயன்தாரா கண் தெரியாதவராக நடித்துள்ளார். வில்லனாக அஜ்மல் பெண்களை பெண்களை கடத்தி, கற்பழித்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளார். கண் தெரியாமல் நயன்தாரா, அஜ்மலிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்? அவரை எப்படி பழிவாகுகிறார் என பரபரப்பான திருப்பங்களோடு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில், ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது. அந்த வகையில் சற்று முன்னர் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை, பாடத்தில் கூட இதெல்லாம் பார்க்க முடியாது என்கிற கேப்ஷனுடன் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நயன்தாரா ஷூட்டிங்கில் நடித்தது, மேக்அப் போடும் காட்சிகள் உள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது...

Scroll to load tweet…