தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், நடிகை நயன்தாரா கோலிவுட் திரையுலகை தாண்டி, மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக, பிகில் படத்திலும்,  தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடித்து வருகிறார்.

அதே போல் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, இவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'லவ் ஆக்ஷன் ட்ராமா'.  இந்த படத்தை பற்றிய முக்கிய தகவலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதாவது இந்த படத்தில் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளனர். சமீப காலமாக மிகுவும் முதிர்ச்சியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்தில் மிகவும் இளமையாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தை, தயான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஓணம் திருவிழாவின்போது ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.