நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' மற்றும் ஒரு சில படங்களில் நடித்து விட்டு, இந்த வருடத்திலேயே திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில்...  தற்போது இவரது கைவசம் அடுத்தடுத்து நான்கு படங்கள் உள்ளதால் மீண்டும் நடிப்பில் படு பிசியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வந்த 'காத்து வாக்கு ரெண்டு காதல்' படம் பாதி முடிவடைந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இவர் நடித்துள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம், ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில்... இயக்குனர் வெங்கட் பிரபுவிடம், உதவி இயக்குனராக பணிபுரிந்த விக்னேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நயன் நடிக்க உள்ளதாகவும், நடிகர் வடிவேலுவை வைத்து ’எலி’, போன்ற காமெடி படங்களை இயக்கி... யுவராஜ் இயக்கத்தில் முழு நேர காமெடி படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் விரைவில் இந்த படங்கள் குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும், ரெட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2 படத்தில் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும், எனவே இவ்விரு படங்களிலும் இவர் நடிக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதால், நயன் அடுத்தடுத்து நான்கு படங்களில் கமிட் ஆகி, மீண்டும் திரையுலகில் படு பிசியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.