இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்திருக்கிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்திருக்கும் நிலையில் சற்றுமுன்னர் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. முதலில் சயன கோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 16-ம் தேதி நாளையோடு அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது. இதனையடுத்து, 17-ம் தேதி மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்பட உள்ளார். வி.ஐ.பி. தரிசனம் இன்று மதியத்தோடு முடிவடைய உள்ள நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகை நயன் தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினரோடு வி.ஐ.பி பகுதியில் தரிசனம் தந்தார். அப்போது அவர் தூய வெண்ணிற குர்தா அணிந்திருந்தார்.

நயன் வருகையை சர்ப்ரைஸாகப் பார்த்த பெண் போலீஸார், உடன் இருந்த பக்தர்கள் அனைவரும் அவருடன் அசராமல் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். செல்ஃபி எடுப்பதற்கு குருக்களும் கூட தயங்கவில்லை. நேற்று ரஜினி குடும்பத்தினருடன் வருகை, இன்று லேடி சூப்பர் ஸ்டார் வருகைகளால் குருக்கள் உற்சாகமாக உள்ளனர். கடைசியாக வெளியான நயனின் ‘கொலையுதிர்காலம்’படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த படங்கள் வெற்றிபெறவும் விக்னேஷ் சிவனுடனான தனது திருமணம் விரைவில் நடக்கவும் அத்திவர்தரிடம் வேண்டியிருப்பார் என்று நம்பப்படுகிறது.