ஹோம்லி லுக்கில் குடும்ப பெண்ணாக வலம் வந்த நந்திதா வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, "இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் சூப்பர் ஹிட்டானது. அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வரும் நந்திதா, மார்டன் உடைகளில் தான் எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். ஹோம்லி லுக்கில் குடும்ப பெண்ணாக வலம் வந்த நந்திதா வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட இடுப்பழகி ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக, சிவப்பு நிற புடவையில் நந்திதா கொடுத்த செக்ஸி போஸ்கள் செம்ம வைரலாகின. 

View post on Instagram

அதனால் தானோ என்னவே மீண்டும் இளசுகளை சூடேற்ற அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நந்திதா ஸ்வேதா. நைட் மோடில் உள்ளாடை மட்டும் அணிந்த படி நந்திதா ஸ்வேதா எடுத்துள்ள ஹாட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அத்துடன் என் மூடுக்கு ஏற்றபடி தான் டிரஸ் போடுவேன், பருவநிலைக்கு ஏற்ற மாதிரி இல்லை என்றும் பதிவிட்டுள்ளார். குடும்ப பாங்கான கதைகளில் நடித்து வந்த நந்திதா ஸ்வேதாவின் இந்த அதிரடி மாற்றத்தை ஏற்றுக் கொள்ள சில நெட்டிசன்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாலும், லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.