தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியிருக்கும் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நந்திதா ஸ்வேதா அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, "இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் சூப்பர் ஹிட்டானது. அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வரும் நந்திதா, மார்டன் உடைகளில் தான் எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். ஹோம்லி லுக்கில் குடும்ப பெண்ணாக வலம் வந்த நந்திதா வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இடை காண்பிக்கும் போட்டியில் இறங்கிய நந்திதா ஸ்வேதா, மொட்டை மாடியில் புடவையில் தனது ஹாட் போட்டோ ஷூட்டை ஆரம்பித்தார். இப்போது அது மட்டுமே வேலை என்பது போல் விதவிதமான போட்டோஸை வெளியிட்டு வருகிறார். அதன் பின்னர் குட்டை டவுசரில் படுக்கையறையில் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட் நந்திதாவின் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியிருக்கும் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நந்திதா ஸ்வேதா அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படுக்கையறையில் படுத்த படி விதவிதமான போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். கண்களில் பரவசம் தவழ, லைட்டாக இடை தெரியும் படி நந்திதா கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.