actress nandhini husband death issue

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய "வம்சம்" திரைப்படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகம் கொடுத்தவர் நடிகை நந்தினி.

இவர் நடித்த முதல் படமே இவருக்கு பல நல்ல வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. படங்களில் நடித்து தீர வேண்டும் என பல கம்பெனிக்கு ஏறி இறங்கிய இவருக்கு. "வம்சம்" படத்தை தொடர்ந்து "கேடி பில்லா கில்லாடி ரங்கா" "ரோமியோ ஜூலியட்" போன்ற பல வாய்ப்புகள் வந்தது.

மேலும் இவர் காமெடி நடிகையாக நடித்து வெளிவந்த, "சரவணன் மீனாட்சி " சீரியல் இவருக்கு நிறைய ரசிகர்களை பெற்றுக்கொடுத்தது.
இதை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நந்தினியின் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டு மொத்த ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளது. அதே போல இவருடைய தற்கொலைக்கு காரணம் என்னவாக இருக்கும் என பல கரணங்கள் இணையதளங்களில் வெளிவருகின்றது.

இந்த சம்பவம் குறித்து நந்தினி நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில்...

நந்தினி மற்றும் கார்த்தி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து தான் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் நந்தினிக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தும் கணவருக்கு நடிப்பதில் உடன்பாடு இல்லாததால் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார்.

ஆனால் தொடர்ந்து சின்னத்திரையில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். ஏற்கனவே முதல் மனைவியை இழந்த கார்த்தி, இவரையும் இழந்து விடுவோம் என்கிற பயத்தில் நந்தினியின் நண்பர்களுடன் இவரை சேர்த்து பேசி சந்தேகப்பட்டுளார்.

திருமணமான சிறிது நாட்களிலேயே கணவர் இப்படி மாறியதால், மனமுடைந்த நந்தினி தன்னுடைய அம்மாவீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. பல முறை நந்தினியின் கணவர் அவரை சமரசம் செய்ய முயன்றும் சந்தேகப்படும் உன்னுடன் வாழமுடியாது என கூறியுள்ளார் நந்தினி.

இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் ஆகி ஒருவருடம் கூட நிறைவு பெறாத நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது தங்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.