கேப்டன் விஜயகாந்துக்கு ஜோடியாக "எங்கள் அண்ணா" என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். மேலும் கவர்ச்சி புயலாக வலம் வந்த இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் திடீரென ஓவர் வெயிட் போட்ட நமீதாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. 

படவாய்ப்புகள் இல்லாததால், காணாமல் போன நடிகைகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட நமீதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டார். இதனால் நமீதாவின் ரசிகர்கள் செம்ம குஷியாகினர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார் நமீதா. அதனைத் தொடந்து, கடந்து ஆண்டு வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை கைவிட்டிருந்த நமீதா, தற்போது மீண்டும் திரையில் தோன்றும் எண்ணத்தில் உள்ளார்.

இதற்காக கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ள நமீதா, ஹாட் போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார். தற்போது சிவப்பு நிற உடையில் நமீதா கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. இந்த கவர்ச்சி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா என்ற தொனியில் நமீதா கொடுத்துள்ள போஸ் இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது.