பெண் குழந்தைகள் பிறந்தால் உடனே மரக்கன்றுகளை நடுங்கள் என நடிகை நமீதா  கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  தமிழில், பாபா,  உன்னை சரணடைந்தேன்,  வீராப்பு, மிலிட்டரி,  உள்ளிட்ட  படங்களில் நடித்தவர் சந்தோஷி,  தமிழ் கன்னடம் தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.  பேஷன் டிசைனில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள அவர்,  சென்னை ,   மதுரை உள்ளிட்ட இடங்களிலும் பொட்டிக்நடத்தி வருகிறார். 

அதேநேரத்தில்  ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்தில் புகழ் பெற்றுள்ள அவர்,  சிகை அலங்காரம் குறித்து செமினார், ஒன்று ஏற்பாடு செய்திருந்தார். அதில் நடிகை நமீதா சின்னத்திரை நடிகைகள் சரவணன் மீனாட்சி புகழ் ரக்சிதா தினேஷ், ரோஜா புகழ் பிரியங்கா,   உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அதில் பேசிய நடிகை நமீதா ராஜஸ்தான் மாநிலம் பிப்லாந்திரி என்கிற ஒரு சாதாரண கிராமத்தில் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே அதை கொண்டாடும் வகையில் ஒரு குழந்தைக்கு 111 மரக்கன்றுகள்  வீதம் ஒவ்வொரு குழந்தைக்கும்  நட்டுவைத்து  வருகிறார்கள்.  பதினைந்து வருடங்களுக்கு முன்பு இது ஆரம்பிக்கப்பட்டது. 

இது அக் கிராமத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன்,  இயற்கைச் சூழலையும் பாதுகாக்கிறது. ஒரு பெண் பிறக்கும்போதே அதிர்ஷ்டம்  கொடுக்கும் விதமாக பிறக்கிறாள்.  பெண்கள் சோதனைகளை சந்திக்க  பிறந்தவர்கள் அல்ல சாதனைப் படைக்க பிறந்தவர்கள். அனைவரும்  இதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.  நான் ஒன்றும் அழகுராணி கிடையாது தன் நம்பிக்கை உடன் உள்ளவர்களே அழகு ராணிகள் என்றார்.