பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடித்து புகழ் பெற்றவர் நளினி நேகி.  இவர் ஓஷிவரா காவல்நிலையத்தில் தன்னுடைய தோழியும், அவரின் அம்மாவும் சேர்ந்து தன்னை கொலை செய்யும் அளவிற்கு அடித்ததாக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, "சில வருடங்களுக்கு முன், நானும் என்னுடைய தோழி ப்ரீத்தி என்பவரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றாக வசித்து வந்தோம்.  பின் அங்கு தங்க விருப்பம் இல்லாததால், நான் தனியாக வீடு பார்த்து தங்கினேன்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னை தொடர்பு கொண்ட ப்ரீத்தி தற்போது தனக்கு வீடு எங்கும் கிடைக்கவில்லை எனவும், அதனால் உன்னுடைய வீட்டில் சில நாட்கள் தங்கி கொள்ளலாமா? என அனுமதி கேட்டார். நானும் பழகிய நட்பின் அடிப்படையில், அவர் தன்னுடைய வீட்டில் தங்க அனுமதித்தேன். தற்போது தான் இருக்கும் வீடு இரு அறைகளைக் கொண்ட வீடு என்பதால், அவர் ஒரு பகுதியிலும், நான் ஒரு பகுதியிலும் தங்கியிருந்தோம்.

சில நாட்கள் கழித்து ப்ரீத்தியின் அம்மாவும் தங்களுடன் வீட்டில் தங்க வந்தர்.  இது குறித்து தான் கேள்வி எழுப்பியதற்கு, விரைவில் இந்த வீட்டை காலி செய்ய உள்ளதால் தனக்கு உதவிக்காக அம்மா இங்கு வந்திருப்பதாகக் கூறினார். ஆனால் அவர்கள் இருவருமே இந்த வீட்டைவிட்டு காலி செய்தது போல் தெரியவில்லை.

மேலும் என்னுடைய அம்மா - அப்பா தன்னை பார்ப்பதற்காகவும், சில நாள் என்னோடு தங்கியிருப்பதற்காக வருவதாக கூறியதைத் தொடர்ந்து ப்ரீத்தியையும், அவருடைய அம்மாவையும் விரைவாக வீட்டை காலி செய்யுமாறு கூறினேன். இதற்கு அவர்களும் காலி செய்து தருவதாக சம்மதம் தெரிவித்தனர். 

இந்நிலையில் கடந்த 21ம் தேதி, நான் நண்பருடன் வெளியில் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தபோது, ப்ரீத்தியின் அம்மா திடீரென தன்னிடம் சண்டை போடுவது போல் பேசினார். நான் மிகவும் பொறுமையாக எதற்காக இப்படி பேசுகிறீர்கள் என கேட்டதற்கு, அவர் குரலை உயர்த்தி பேசினார். பின் அங்கு வந்த ப்ரீத்தியிடம் நான் அவரை தவறாக பேசியதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பிரீத்தி அவர் அம்மா கையில் வைத்திருந்த கண்ணாடி டம்ளரால் என் மூஞ்சியில் அடித்தார் பின் இருவரும் சரமாரியாக தன்னை தாக்க ஆரம்பித்தனர். ஒரு நிலையில் இருவரும் தன்னை கொல்ல முயற்சி செய்தனர். எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரத்த காயங்களுடன் கூடிய புகைப்படத்தை சாட்சியாக கொடுத்து போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை.  இதுகுறித்து போலீசார் தற்போது  விசாரணை நடத்தி வருகிறார்கள்.