இயக்குனர் இமையம் பாரதி ராஜா, இயக்கி, தயாரித்து, நடித்திருந்த திரைப்படம், 'மீண்டும் ஒரு மரியாதை'. இந்த படத்தில் அறிமுகமானவர் நடிகை நக்ஷத்ரா. இவரை தவிர, ஜோ மல்லாரி, மௌனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த வாரம் வெளியான இந்த படத்திற்கு தொடர்ந்து கலவையான விமர்சனங்களே கிடைத்தது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா உட்பட மூன்று பேர் இசையமைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில், நடித்திருந்த நாயகி நக்ஷத்ராவிற்கும் சத்யானந்தன் என்பவருக்கு பொள்ளாச்சியில் மிக விமர்சியாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு இந்த தம்பதியை வாழ்த்தியுள்ளனர்.

இவர்களுடைய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து நெட்டிசன்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.