சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது அவருடைய ரசிகர்களின் மிக பெரிய எதிர்ப்பார்பு. நேற்றய தினம் இது குறித்து ஏதேனும் அறிவிப்பார் என எதிர்ப்பார்தவர்களுக்கு இவரின் பதில் அதிர்ச்சியை கொடுத்தது.

அரசியல் குறித்து மூன்று முக்கிய திட்டங்களை வைத்திருப்பதாகவும், ஆனால் மக்களிடம் எழுச்சி வந்தால் மட்டுமே தான் அரசியலுகு வருவேன் என்றும், முதலமைச்சர் ஆகும் என்னம் தனக்கு அரவே இல்லை என ஆணித்தனமாக பேசினார்.

ஒரு தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருந்த போதிலும், பலருக்கு அதிருப்தியை ஏற்ப்படுத்தியது.. இந்நிலையில் பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான நடிகை நக்மா ரஜினிக்கு அட்வைஸ் செய்துள்ளார்

இது குறித்து அவர் கூறுகையில் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் வெற்றி வாய்ப்பை பெறுவது ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டிஆர் போன்றவர்கள் மட்டுமே திரைத்துறையில் இருந்து வந்து அரசியலில் ஆட்சியை பிடித்தார்கள். கடந்த 17 வருடங்களாக  காங்கிரஸ் கட்சியில் மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறேன்.

ரஜினிகாந்தின் புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இருப்பினும் அவர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்? கட்சியை எப்படி நடத்த போகிறார்? மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு அரசியலுக்கு வர வேண்டும் அவருடைய புதிய மாற்று அரசியல் முயற்சிக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள் என்று நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.