முன்னணி நடிகர் நடிகைகளின், சினிமா வாழ்க்கையில் மார்க்கெட் டல் அடிக்கும் போது, அரசியலில் சென்று அவர்கள் ஐக்கியமாவது அந்த காலம் முதல் இந்த காலம் வரை அரங்கேறி வருகிறது. 

இப்படி பல்வேறு கட்சிகளில் இணைந்த பல நடிகர் - நடிகைகள் உள்ளனர். அந்த வகையில், நடிகையாக இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் பிரபல நடிகை நக்மா. தற்போது மகிளா காங்கிரஸ் செயலாளராக உள்ளார்.

இவர் தமிழில் கடைசியாக, தல அஜித் நடித்த 'சிட்டிசன்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து இந்தி, மற்றும் போஜ்புரி மொழி படங்களில் மட்டுமே நடித்தார். அரசியலில் கவனம் செலுத்த துவங்கியதும், திரைப்படங்கள் நடிப்பதில் இருந்து முழுமையாக விலகினார்.

குறிப்பாக இவர் நடிப்பில் 1995 ஆம் வருடம்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து வெளியான 'பாட்ஷா, திரைப்படம் தற்போது வரை எந்த திரைப்படங்களும் முறியடிக்க முடியாத பல சாதனைகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது அவர் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருவதாகவும், அதில் ஒரு படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் அம்மாவாக நடித்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இந்த படத்தை த்ரிவிக்ரம் இயக்குகிறார். மேலும் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நல்ல கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் நக்மா தெரிவித்துள்ளார். திடீர் என இவர் அரசியலில் இருந்துகொண்டே நடிக்க கவனம் செலுத்துவது ஏன்? என்கிற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.