ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய முதல் இந்திய நடிகை யார் தெரியுமா? கண்டிப்பா ஸ்ரீ தேவி, மாதுரி இல்ல..

ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்த முதல் இந்திய நடிகை நாதிரான் தான். 

Actress Nadira : Do you know who was the first Indian actress to own a Rolls Royce car?

ஹிந்தி திரையுலகில் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவராக கருதப்பட்டவர் தான் நாதிரா. ஈராக்கின் பாக்தாத்தில் யூத குடும்பத்தில் பிறந்த நாதிராவின் உண்மையான பெயர் எசேக்கியேல். நாதிரா 1950 மற்றும் 1960களில் Aan, Shree 420, Pakeezah, Amar Akbar Anthony, and Julie உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க 1950கள் மற்றும் 1960களின் படங்களில் நடித்திருந்தார். ஜூலி படத்தில் நடித்ததற்காக, நதிரா சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். அந்த காலக்கட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார் நாதிரா.மேலும் இன்னொரு சாதனையின் தனித்து நின்றார் நாதிரா. ஆம், ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்த முதல் இந்திய நடிகை நாதிரா என்பது உங்களுக்குத் தெரியுமா?

சமீபத்திய காலங்களில், அஜய் தேவ்கன், ஷாருக்கான் மற்றும் சஞ்சய் தத் போன்ற பல நடிகர்களுக்கு மத்தியில் சில நடிகைகளே ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்திருந்தனர். அந்த வகையில் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் சில நடிகைகளில் ஒருவராக பிரியங்கா சோப்ரா இருக்கிறார். இருப்பினும், அதற்கு ட்ரெண்ட் செட்டர் என்றால் அது நாதிரா தான். 1960களில் இருந்த நடிகைகள் பொதுவாக தங்களிடம் இருந்த சொத்துக்கள் மற்றும் ஆடம்பர பொருட்களை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் இந்த வழக்கத்திற்கு மாறாக நாதிரா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருந்தார்.

ஒரே நாளில் ரூ.8700 கோடி சம்பாதித்த பெரும் பணக்காரர்.. அவரின் சொத்து மதிப்பு ரூ.4,34,600 கோடி!

நாதிராவின் முதல் ஊதியம் வெறும் ரூ.1200 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, காலப்போக்கில் அவரது ஊதியம் ரூ.2500 ஆக உயர்ந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, நாதிராவின் புகழ் உச்சத்திற்கு சென்றதால் அவரின் ஊதியம் கணிசமாக உயர்ந்தது. இதனால் அவர் ஆடம்பர வசதியான வாழ்க்கை வாழத் தொடங்கினார். அதன்படி நாதிரா ஒரு 3600 ரூபாய் வரை சம்பளம் பெற்றார், அது அந்த நேரத்தில் பெரிய தொகையாகும்.

1943-ம் ஆண்டு வெளியான Maujஎன்ற படத்தின் மூலம் நாதிரா பாலிவுட்டில் அறிமுகமானார். அப்போது அவருக்கு 10 வயது தான். 1952 ஆம் ஆண்டு வெளியான Aan திரைப்படத்தில் நடித்த பிறகு, நாதிரா புகழ் பெற்றார். அந்த படத்தில் ராஜபுத்திர இளவரசியாக நடித்திருந்த நாதிராவின் நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் 1955 ஆம் ஆண்டு Shree 420. திரைப்படத்தில் ஒரு பணக்கார சமூகவாதியாக நடித்தார். நாதிரா தனது 73 வயதில், பிப்ரவரி 9, 2006 அன்று மும்பையில் காலமானார். நாதிராவுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios