'சிறு துளி பெரு வெள்ளம்' என்கிற பழமொழிக்கு ஏற்ப, சின்மயி metoo மூலம் ஆரம்பித்த புகார்கள் தற்போது நீண்டு கொண்டே போகிறது.

'சிறு துளி பெரு வெள்ளம்' என்கிற பழமொழிக்கு ஏற்ப, சின்மயி metoo மூலம் ஆரம்பித்த புகார்கள் தற்போது நீண்டு கொண்டே போகிறது.

இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஹாஷ்டாக்கில் சென்று நீங்கள் பெண்கள் எப்படி பட்ட கஷ்டங்களை அனுபவித்து உள்ளார்கள் என படித்தால், மிரண்டு போய் விடுவீர்கள். அப்படி ஆதங்கத்தையும், மன வேதனைகளையும் கொட்டி தீர்த்து வருகிறார்கள் பலர்.

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகாரை முன்வைத்த போதும், ஹிந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா தீ இயக்குனர் நானா படேகர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியிட்ட போதிலும் மௌனம் காத்த பலர் இப்போது தங்களுடைய மௌனத்தை விட்டு வெளியே வந்து பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்கள்.

தற்போது #Metoo ஹாஸ்டாகினை பற்றி பிரபல நடிகை நதியா அவருடைய கருத்தை சமீபத்தி ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகியில்... மேலிடத்தில் இருப்பவர்கள் முதலில் , யாரிடமும் சலுகைகள் எடுத்துக்கொள்ளகூடாது". இப்படி பல பெண்கள் முன்வந்து தங்களுக்கு நடந்த அநீதிகள் குறித்து பேசினால், குற்றம் செய்தவரின் பெயரை வெளியிட்டால் அவர்களுக்கு பயம் வரும் அதனால் பெண்கள் முன்வந்து இதுபோன்று பேசவேண்டும்.

ஆண்கள் தங்கள் உரிமைக்காக பேசுகின்றனர். அதுபோல் பெண்களும் பேச வேண்டும். இதைப்பற்றி பெண்கள் பேசுவது மிகவும் நல்லது நான் அதை பாராட்டுகிறேன் என்று சின்மயிக்கு ஆதரவாக அதிரடியாக கூறியுள்ளார்.