பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாகினி என்ற சின்னத்திரை தொடர் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகம் ஆனவர் நடிகை மௌனி ராய்.
இந்த சீரியல் மூலம் பல பெண்களை மட்டும் இல்லாமல் ஆண்களையும் தன் அழகினாலும், கவர்ச்சியாலும் கட்டி இழுத்து டி.வி முன் அமரவைத்தவர்.
தற்போது இவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உருவாகி விட்டது, இதை பார்த்த சில சின்ன தயாரிப்பு நிறுவனங்கள் இவரை தன் படத்தில் ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அதே போல் சிலர் ஒரு பாடலுக்கு ஆடவும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே இவர், அபிஷேக் பச்சன் நடித்த ரன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார், அதே போல் ஒரு பஞ்சாபி படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் நடிப்பதற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
விரைவில் தமிழ் சினிமாவில் நாகினி ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்க படுகிறது.
