தென்னிந்திய அழகி பட்டம் வென்றவரும் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட நாயகிகளுல் ஒருவருமான  மீரா மித்துன்  தன்னை சிலர் தொழில் ரீதியாக மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற மீரா மித்துன். தமிழில் ‘8 தோட்டாக்கள்’ படத்திலும் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாகவும் நடித்தவர். மாடலிங் துறையிலும் பிரசித்தி பெற்றவர். இன்று அவர்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்,...”நான் மிஸ் சவுத்இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆப் சவுத் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளேன். 2 தமிழ் படங்களில் நடித்துள்ளேன். மிஸ் தமிழ்நாடு மண்டல இயக்குனராகவும் பணி புரிந்துள்ளேன்.

இந்நிலையில் மே 3-ம்தேதி ’மிஸ் தமிழ்நாடு டீவா 2019’என்ற நிகழ்ச்சியை நடத்தப்போவதாக அறிவித்தேன். இதனை தடுக்கும் வகையில் அஜீத் ரவி, ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். எனது செல்போனையும் சமூகவலைதளத்தையும் முடக்கி விட்டு தவறான வதந்திகளை பரபரப்பி வருகின்றனர். நான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை நடத்தக்கூடாது என்பதற்காகவே 2 பேரும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும் சில காவல்துறை அதிகாரிகள் மூலமாக மிரட்டி வருகின்றனர். சம்மன் இல்லாமல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கின்றனர். அவர்கள் மிரட்டல் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. 

அஜீத் ரவி ஏற்கனவே என்னுடைய அழகி போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.தொழில் போட்டி காரணமாக ஜோ மைக்கேல் பிரவீன் மூலமாக அஜீத் ரவி என்னை மிரட்டி வருகிறார். அழகி போட்டிகளில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. தமிழ் பெண்களுக்காகவே நான் நடத்தும் இந்த அழகி போட்டியும்  தமிழ் பெண்களுக்காகத் தான். 2 பேரும் அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை நான் நடத்த உதவியாக இருக்க கூடிய விளம்பரதாரர்களையும் அவர்கள் 2 பேரும் மிரட்டுகிறார்கள். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும். ஜூன் 3-ம்தேதி வடபழனி நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ள அழகி போட்டிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளார். 

தொழில் போட்டி தொழில் போட்டிங்குறீங்களே அது என்ன விதமான தொழில் போட்டிங்குறைதையும் தெளிவா சொல்லீட்டிங்கன்னா நல்லாருக்கும் மீரா மித்துன் மேடம்?