பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார். இந்த சென்னையே வேண்டாம்... நானெல்லாம் பாலிவுட் பீஸ் என மும்பைக்கு கிளம்பி போனார். 

அங்கு போயும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். மீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை. மீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. 

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கினாலும், கவர்ச்சியில் அடங்க மாட்டேன் என்று அட்ராசிட்டி செய்து வருகிறார். மேலும் சாதாரண நாட்களை விட லாக்டவுன் நேரத்தில் படுகவர்ச்சி உடையில் போட்டோ வெளியிடுவது, ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்வது என்று கொஞ்சம் ஓவராக போய்க்கொண்டிருக்கிறார். எல்லை மீறி கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வந்த மீரா மிதுன், தற்போது அடுத்த எல்லைக்கு தாண்டியுள்ளார். 

இதையும் படிங்க: செம்ம ஸ்லிம் லுக்கில் நயன்தாரா... சிக்குன்னு இருக்கும் இந்த சின்ன வயசு போட்டோவை பார்த்திருக்கவே மாட்டீங்க...!

லாக்டவுன் நேரத்தில் திரைப்பிரபலங்கள் தங்கள் மனம் கவர்ந்த பழைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.அ அதே டெக்னிக்கை கையில் எடுத்துள்ள மீரா மிதுன் பிரபலங்களுடன் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்களை வெளியிட்டு வருகிறார். இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் அனிருத் உடன் எடுத்துக்கொண்ட செல்ஃபிகளை பகிர நெட்டிசன்கள் வழக்கம் போல் கிண்டல் கமெண்ட்ஸ்களை அள்ளி தெளித்தனர். 

இதையும் படிங்க: இடையை விட மெல்லிய உடை.... புடவையில் இளசுகளை கிறங்கடித்த சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சி...!

தற்போது மீரா மிதுன் விஷாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர, இது நம்ம லிஸ்ட்டிலேயே  இல்லையே என வாய்பிளந்துள்ளனர். அதிலும் விஷால் மீரா மிதுன் தோள் மீது கைபோட்டு, அவரை மார்போடு சேர்த்து அணைத்தபடி போஸ் கொடுத்திருப்பது நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளது. அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயில் வந்தபடி மீரா மிதுனை வசைபாடி வருகின்றனர்.