பிரபல தமிழ் நடிகை ஒருவர், கொரோனாவால் தான் பார்த்த விஷயங்களை கூறி, ரசிகர்களையும் பொதுமக்களையும் எச்சரித்துள்ளார்.

தமிழில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் அன்பே ஆருயிரே, சிபிராஜுக்கு ஜோடியாக லீ,  அர்ஜூனுடன் மருதமலை போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை மீரா சோப்ரா. இவர் தமிழ் அல்லாது தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரியும் ஆவார்.

தற்போது தமிழில் இவர் படங்கள் நடிக்கவில்லை என்றாலும், ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர், கொரோனாவால் தன்னுடைய தோழி ஒருவரின் தாய் - மற்றும் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து, ட்விட் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, தன்னுடைய தோழியின் தாய் , கடத்த சில தினங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவருடைய தந்தையும் நேற்று உயிரிழந்தார். எனவே கொரோனாவை அலட்சியமாக நினைக்காதீர்கள். பாதுகாப்பாக இருங்கள். எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுங்கள் என கூறியுள்ளார்.

நடிகை நிலாவின் இந்த பதிவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முடிந்தவரை மக்களின் வசதி கருதி தளர்வுகள் கொண்டு வந்தாலும், பாதுகாப்புடன் இருப்பதால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.