actress meenatchi daaba murder case

பிரபல நேபாள நடிகை மீனாட்சி தாபா, கடந்த 2012 ஆம் ஆண்டு மும்பையில் படப்பிடிப்பில் இருந்த போது தன்னை பணக்கார வீட்டுப் பெண் எனவும், பொழுதுபோக்கிற்காக மட்டுமே படத்தில் நடிப்பதாகவும் மிகவும் பந்தாவாக கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனை கேட்ட துணை நடிகர்கள், அமித் ஜெய்ஸ்வால் மற்றும் பிரீத்தி சுரின் ஆகியோர் மீனாட்சி தாபாவை கடத்தி அவருடைய பெற்றோரிடம் இருந்து மிகப்பெரிய தொகையை வசூலிக்க முடிவு செய்தனர்.

இதனால் நடிகை மீனாட்சியை அலகாபாத்திற்கு கடத்திச் சென்ற இவர்கள். மீனாட்சியின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் இறுதியில் இவர்கள் கேட்ட பணம் கிடைக்காததால் ஆத்திரத்தில் மீனாட்சி தாபாவின் தலையைத் துண்டித்துக் கொலை செய்தனர்.

மேலும் இவர்கள் தான் குற்றவாளிகள் என கைது செய்யப்பட்ட நிலையில், மும்பை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இருவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி இவர்கள் தான் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார் விரைவில் இவர்களுடைய தண்டனை விவரம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.