Asianet News TamilAsianet News Tamil

10 ஆம் வகுப்பிலேயே நடிகர் ஜெயராம் வாக்கு பலித்தது! கேப்டன் ஆசீர்வாதமும் கிடைத்தது! உருக்கமாக பேசும் நடிகை மீனாட்சி!

கேரளத்து பொண்ணு மீனாட்சி சினிமா நடிகையானது எதேச்சையாக . பத்தாம் வகுப்பில் படிக்கும் வேளையில் தனது ஊர்க்காரரான இயக்குனர் கண்ணன் தாமரைக்குளம் இயக்கி கொண்டிருந்த ' திங்கள் முதல் வெள்ளி வரை' என்ற படத்தின் படப்பிடிப்பை பார்க்க சென்றவரை இயக்குனர் ஒரு கட்சியில் நடிக்க வைத்திருக்கிறார் .

actress meenatchi about how to enter the movie
Author
Chennai, First Published Nov 1, 2018, 8:00 PM IST

கேரளத்து பொண்ணு மீனாட்சி சினிமா நடிகையானது எதேச்சையாக . பத்தாம் வகுப்பில் படிக்கும் வேளையில் தனது ஊர்க்காரரான இயக்குனர் கண்ணன் தாமரைக்குளம் இயக்கி கொண்டிருந்த ' திங்கள் முதல் வெள்ளி வரை' என்ற படத்தின் படப்பிடிப்பை பார்க்க சென்றவரை இயக்குனர் ஒரு கட்சியில் நடிக்க வைத்திருக்கிறார் .ஒரே டேக்கில் மீனாட்சி நடித்து அசத்தியிருக்கிறார் . இதை கவனித்து கொண்டிருந்த அந்த படத்தின் கதாநாயகன் ஜெயராம் அவரை அழைத்து ' உனக்கு நடிப்பு திறமை உள்ளது .நீ பெரிய நடிகையாக வரவேண்டும்' என்று ஆசீர்வதித்தார்.

பின்னாளில் ஜெயராமின் ஆசீர்வாதம் பலித்தது . பி .ஜி .முத்தையா விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியனை கதாநாயகனாக வைத்து இயக்கிய 'மதுரவீரன்' படத்துக்காக்க கேரளமெங்கும்  கதாநாயகி வேட்டை நடத்தி இறுதியாக காயம்குளம் என்ற ஊரிலிருந்து  மீனாட்சியை கண்டெடுத்தார். அந்த படத்தில் மீனாட்சியின் நடிப்பு மீடியாவால் மிகவும் பாராட்டப்பட்டது. படத்தை பார்த்து கேப்டன் விஜயகாந்த் மீனாட்சியின் நடிப்பை பாராட்டியதும் ,அவரது பாதம் தொட்டு வணங்கியபோது அவர் ஆசீர்வதித்ததும் நெகிழ்ச்சியான வாழிவில் மறக்க முடியாத அனுபவமும் அருளும் என்று கருதுகிறார். 

மதுரவீரனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலிருந்து நிறைய வாய்ப்புக்கள் வந்தபோதும் பிளஸ் ஒன் தேர்வு காரணமாக அந்த வாய்ப்புகளை மீனாட்சிக்கு ஏற்க இயலாமல் போனது. அது மட்டுமல்லாமல் தேடிவந்தது  அனைத்துமே முதிர்ச்சியான கிராமீய நாயகி வேடங்கள். சின்னபொண்ணான தனக்கு மாடர்ன் வேடங்களும் பொருந்தும் என்று நிரூபிக்க காத்திருக்கிறாராம் மீனாட்சி . 

 தற்சமயம் மலையாளத்தில் இரு பெரிய ஹீரோக்களின் படத்தில் கதாநாயகியாக  நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதனாலேயே மலையாள மீடியாக்களின் கவனமும் இப்போது மீனாட்சி பக்கம் திரும்பியுள்ளது . எவ்வளவு சவாலான வேடங்களும் ஏற்று நடிக்க தயார் என்று  கூறும் மீனாட்சி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவேன் என்று தன்னம்பிக்கையுடன் உள்ளார். 

மேலும் தனது நடிப்பு திறனை மெருகேற்ற நாட்டியமும் கற்று வருகிறாராம் . தமிழில் நடிப்பதற்க்காக  தமிழ் மொழியும் கற்றுள்ளார் . மலையாள நாட்டிலிருந்து வந்தாரை வாழ வைக்கும் கோடம்பாக்கமும்  தமிழ் சினிமாவும்  மீனாட்சியையும் அரவணைக்கும் என்று நம்புவோம் .காஜல் என்பது இந்த கேரள குட்டியின் செல்லப் பெயராம் .

Follow Us:
Download App:
  • android
  • ios