பாலிவுட் போலவே தமிழிலும் வெப் சீரியல்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் நடிகை மீனா முழுமூச்சாக வெப் சீரியல்களில் அதிலும் குறிப்பாக கிளாமர் ரோல்களில் நடிக்க முடிவெடுத்திருப்பதாக அவரது உதவியாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளின்  சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட அனைத்து முன்னணி ஹிரோக்களுடனும் ஜோடியாக நடித்தவர் திருமணத்திற்குப் பிறகு அக்கா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.மீனாவின் மகள் நைனிகாவும் சினிமாவில் எண்ட்ரியாகி பல படங்களில் நடித்து பாராட்டு பெற்று வருகிறார். தற்போது சில படங்களில் நடித்து வரும் மீனா, வெப் சீரிஸிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

‘கரோலின் காமாட்சி’ என்ற வெப் சீரிஸில் காமாட்சி என்ற சிபிஐ அதிகாரி வேடத்தில் மீனா நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மீனாவின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.முகத்தில் கவர்ச்சியையை காட்டும் விதமாக மீனா எடுத்துக் கொண்டிருக்கும் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள், ‘கரோலின் காமாட்சி’ வெப் சீரிஸிக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள தானா, என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் இந்த தொடரை அடுத்து சற்று கிளுகிளுப்பான வெப் சீரியல்களில் முழு கிளாமராக நடிக்க முடிவெடுத்திருக்கும் மீனா,’இன்றைய எத்தனையோ கதாநாயகிகளை விட நான் நச்சென்றுதான் இருக்கிறேன். வெப் சீரிஸ் பார்த்தவுடன் இயக்குநர்கள் என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைக்கிறார்களா இல்லையா என்று பாருங்கள்’என்று சவால் விடுகிறாராம்.